கருவேல மனம்...!

இப்போ இந்த இடத்த  விக்காட்டி என்ன..?

அதான்  நல்ல விலை போகுதுல்ல வித்துடலாம்..!

இல்ல அமுதன் மெட்ராஸ்ல சம்பாதிச்சு சொந்த  ஊர்ல ஒரு இடம் வாங்கி போட்டு இருக்கான்னு ஒரு பேரு..! இப்போ  இத  வித்தா  எதோ கடன் ஆயிட்டான் அதான் விக்கிறான்னு ஊர்ல சொல்லுவாங்க..!-- இடத்தை விற்காமல் செய்ய ஆனந்தன் வாதாடினான்..!

அட நீ வேற இதெல்லாம் பாத்தா ஆகுமா..? மொதல்ல நான் ஊர்ல இடம் வாங்கினதே தப்பு  எதோ ஊர் பாசத்துல வாங்கிட்டேன்  இதே மெட்ராஸ் பக்கம் ஒரு கால் கிரவுண்டு வாங்கி போட்டு இருந்தாலே போதும் இப்போ  விலை எங்கேயோ போய் இருக்கும்.! 2 லட்ச ரூபாய்க்கு வாங்கி 8 லட்சத்துக்கு விக்கிறேன்..! இத வாங்கினதே ஒரு முதலீட்டுக்காக தானே இங்க வந்து என்ன வீடாகட்ட போறோம் ..!

இடத்த விக்கிறதுல உனக்கு வருத்தமே இல்லையா..?

கொஞ்சம் கூட இல்ல அதோட  எனக்கு இந்த தொகை  ஒரு முக்கிய தேவைக்கு உதவுது அதுல எனக்கு சந்தோசம்தான்..! 

மஞ்சள் நிறத்தில் பூப்பூத்து இருந்த அந்த சீமை கருவேல மரத்தடியில் நின்று தான் பேசிகொண்டுஇருந்தோம். இந்த இடத்தை நான் வாங்கிய போதே நாலடி உயரத்தில் கருங்கற்கள் நட்டு முள்கம்பி  வேலி இருந்தது. இந்த ஒரு கருவேல மரமும் இருந்தது..! இப்போது  முள் கம்பிகள் எதும் இல்லை வெறும் நாலடிகருங்கல் மட்டும் 15,16 எண்ணிக்கையில் இருந்தது..!


இடத்தை விற்று  கிட்ட தட்ட முழுபணமும் வாங்கியாயிற்று... கொஞ்சம் மட்டும் மீதி...!  இடத்தை அளந்து கொடுக்க வேண்டும் அளக்க ஆள் வரும்போது வர சொல்லி இருந்தார்கள்..!

போனேன்..!
 இடத்தை பார்த்தால் நிறைய மாறுபாடு தெரிந்தது..! சுற்றி இருந்த கருங்கற்களை காணவில்லை ..!அந்த கருவேலமரம் தரையோடு வெட்ட பட்டு கிடந்தது..! 

ஏன் மரத்த  வெட்டுனாங்க.. கருங்கல்  எல்லாம்  எங்கே..?  நான் கேட்க ..? 
ஆனந்தன் விளக்கினான் ..! நாம இடத்த  வித்தது ஒரு புரோக்கர் கிட்ட அவர் வேற ஆள் கிட்ட விக்கிறதுக்கு முன்னாடி இந்த இடத்துல என்ன என்ன எல்லாம் தேறுதோ  அதை எல்லாம் எடுத்துகிட்டாரு..!

சரி இந்த மரம் என்னத்துக்கு ஆக போகுது.. அதை ஏன் வெட்டினாங்க..?

ஏனா..? விறகுக்கு ஆனால் கூட லாபம்தானே..?

என்னது  விறகுக்கா..!

அளந்து முடித்தார்கள் ...!

கிளம்பும் போது ..!  இடத்தில்  ஒரு மூலையில்  இத்தனை நிழலாய் நின்றிருந்த கருவேல மரம் வெட்ட பட்டு பிணமாய் கிடந்த போதுதான் மனதில் ஒரு முள்..!! 
இடத்தை விற்காமல் இருந்திருக்கலாமோ..!


>

5 comments:

இராஜராஜேஸ்வரி said...

இடத்தை விற்காமல் இருந்திருக்கலாமோ..!


மனதில் தைத்த முள்..

Kumar P said...

கருவேல மரத்திற்கு பதில் வேற எதாவுது இருந்திருந்த நல்ல இருந்திருக்கும்... நான் கேள்விப்பட்டவரை அவை நிலத்திர்க்கோ இல்லை காற்றுக்கோ நல்லதில்லை...

thamilarasi said...

மரம் என்ற பார்வையில் நீங்க அதை பார்க்கவில்லை சொந்த நிலமாக இருந்த வரையில் அது உங்கள் உறவாகவே இருந்திருக்கிறது.

கைமாறிய பின் அதை அம்மரத்தை வெட்டவே அதை அப்படியே உறவின் உயிர் வலியாய் பார்த்திருக்கீங்க..தமிழ் வியப்பாய இருக்கு உங்க உணர்வு,,என்றோ ஒரு முறை பார்க்கும் அந்த மரத்தின் மேல் உங்கள் ப்ரியம்..உணர்வுகளை பிரதிபலிக்கும் போது எவரிடம் எதன் மேல் என்பதற்கு முக்கியத்துவம் தேவைபடுவதில்லை

மனோ சாமிநாதன் said...

சொந்த நிலத்தையோ, மரத்தையோ, அல்லது எந்த சொத்தையுமோ விற்கும்போது, அந்தத் தேவைக்கு முன்னால் அந்த சொத்தை விற்பதனால் ஏற்படக்கூடிய மன வலி தெரிவதில்லை. விற்ற பிறகு தான் வலி புரிகிறது. விற்றிருக்க வேண்டாமோ என்றும் தோன்றும். இது எல்லோருக்குமே தோன்றும் உணர்வு தான்! அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்!!

கண்ணம்மா said...

மரம் என்ற பார்வையில் நீங்க அதை பார்க்கவில்லை சொந்த நிலமாக இருந்த வரையில் அது உங்கள் உறவாகவே இருந்திருக்கிறது.

கைமாறிய பின் அதை அம்மரத்தை வெட்டவே அதை அப்படியே உறவின் உயிர் வலியாய் பார்த்திருக்கீங்க..தமிழ் வியப்பாய இருக்கு உங்க உணர்வு,,என்றோ ஒரு முறை பார்க்கும் அந்த மரத்தின் மேல் உங்கள் ப்ரியம்..உணர்வுகளை பிரதிபலிக்கும் போது எவரிடம் எதன் மேல் என்பதற்கு முக்கியத்துவம் தேவைபடுவதில்லை

அவளே இவள் கண்ணம்மாவாய்..