நீ எந்த ஒரு காரியம் செய்தாலும் உன் இறுதி முடிவை நினைத்து கொள்!
கொஞ்ச காலம் முன்னர் ஒரு பள்ளியின் சுவற்றில் இதை படித்தேன். என்ன சொல்லுகிறது இந்த வாசகம்? ''சாகப்போறே சரியா நடந்துக்கோ'' இப்படித்தானே ?
வாழ்க்கை குறித்து சிலர் சொல்லும் விசயங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

வாழ்க்கை ஒரு நெடிய பயணம் ,வாழ்க்கை ஒரு சரித்திரம் ,இப்படியெல்லாம் சொல்வது சரிதானா என்ற கேள்வியும் வருகிறது!
ஐம்பது வயதில் வாழ்க்கையை அசை போட்டால் இப்போது செய்வது தவறென தோன்றுமா?
இப்போது ஒரு எண்ணம்!!!!!
அறுபத்தைந்து வயது வயோதிகனாக வாழ்க்கையை அசை போடுகிறேன் அதே அசை போடும் வாழ்க்கையை முப்பத்தைந்து வயதில் லைவ் ஆக வாழ்கிறேன்!!!
அறுபத்தைந்து வயது என்னிடம் முப்பத்தைந்து வயது நான் ஆலோசனை கேட்டு நடந்து கொண்டால் இனியும் தவறு ஏதும் செய்யாமல் இருக்கலாம் அல்லவா ?
அப்படி ஆலோசனை சொன்னால் என்ன சொல்வேன்?
கடமைகளை மீதம் வைக்காமல் நிறைவேற்றிவிடு!
யாருக்கும் நன்மை செய்யாமல் இருக்கலாம்! ஆனால் ? எவருக்கும் கெடுதல் செய்யாதே! மரண படுக்கையில் குற்ற உணர்ச்சியுடன் இருப்பது மிகப்பெரிய கொடுமை! மன்னிப்பும் கேட்க முடியாது ! பரிகாரமும் தேட முடியாது!
வாழ்க்கை நிம்மதியாக இருப்பதைவிட, மரணம் நிம்மதியாக இருக்க வேண்டும் அதுதான் முக்கியம்!
மேலே சொன்ன வாக்கியம்;-
நீ எந்த ஒரு காரியம் செய்தாலும் உன் இறுதி முடிவை நினைத்து கொள் !
( முப்பத்தைந்து வயது நான் அறுபத்தைந்து வயது என்னை நோக்கி வெகு வேகமாக சென்று கொண்டு இருக்கிறேன்)
எனக்கு பிறகு என் பிள்ளைக்கு என் பெயர் தெரியும்,என் பேர பிள்ளைக்கு என் பெயர் தெரியும் அவன் பிள்ளைக்கு என் பெயர் தெரிய போவது இல்லை ! அவ்வளவுதான்! ஒரு பூ கருகுவதை போல,ஒரு கனி உதிர்வதை போல சர்வ சாதாரணமாய் முடிய போகிறது என் வாழ்க்கை! இதற்க்காக ஏன் பெரிதாக அலட்டி கொள்ள வேண்டும்?
MGR வாழ்ந்து விடாத வாழ்க்கையா,சிவாஜி கணேசன் வாழ்ந்து விடாத வாழ்க்கையா ? அவர்களும் சிம்பிளாக செத்துத்தானே போனார்கள் ? பெரிய பிரபலங்களே கால வெள்ளத்தில் காணாமல் போகும் போது நாமெல்லாம் எம்மாத்திரம் ?
முப்பத்தைந்து வருடம் போய்விட்டது எப்படி போனது...? சட்டென போய்விட்டதுபோல இருக்கிறது ! ஐம்பது வயதிலும் இப்படித்தான் தோணும்! அறுபத்தைந்து வயதிலும் இப்படித்தான் தோண போகிறது!
கடந்த காலத்தை இப்போது அசை போட்டால் சில தவறுகள்செய்திருப்பது புரிகிறது! இன்னும் கொஞ்சம் படித்து இருக்கலாமோ? இங்கிலீஷ் மீடியம் படித்து இருக்கலாமோ ? ஊதாரி தன செலவுகளை குறைத்து இருக்கலாமோ ? இப்படியெல்லாம் தோன்றுகிறது ?
ஐம்பது வயதில் வாழ்க்கையை அசை போட்டால் இப்போது செய்வது தவறென தோன்றுமா?
இப்போது ஒரு எண்ணம்!!!!!
நான் அறுபத்தைந்து வயது வயோதிகனாக மாறி மரண படுக்கையில் நாட்களை எண்ணி கொண்டு இருக்கிறேன்! முப்பத்தைந்து வயது மனிதனாக வாழ்ந்து கொண்டும் இருக்கிறேன் இரண்டுமே நான்தான்!!!
அறுபத்தைந்து வயது வயோதிகனாக வாழ்க்கையை அசை போடுகிறேன் அதே அசை போடும் வாழ்க்கையை முப்பத்தைந்து வயதில் லைவ் ஆக வாழ்கிறேன்!!!
அறுபத்தைந்து வயது என்னிடம் முப்பத்தைந்து வயது நான் ஆலோசனை கேட்டு நடந்து கொண்டால் இனியும் தவறு ஏதும் செய்யாமல் இருக்கலாம் அல்லவா ?
அப்படி ஆலோசனை சொன்னால் என்ன சொல்வேன்?
கடமைகளை மீதம் வைக்காமல் நிறைவேற்றிவிடு!
யாருக்கும் நன்மை செய்யாமல் இருக்கலாம்! ஆனால் ? எவருக்கும் கெடுதல் செய்யாதே! மரண படுக்கையில் குற்ற உணர்ச்சியுடன் இருப்பது மிகப்பெரிய கொடுமை! மன்னிப்பும் கேட்க முடியாது ! பரிகாரமும் தேட முடியாது!
வாழ்க்கை நிம்மதியாக இருப்பதைவிட, மரணம் நிம்மதியாக இருக்க வேண்டும் அதுதான் முக்கியம்!
மேலே சொன்ன வாக்கியம்;-
நீ எந்த ஒரு காரியம் செய்தாலும் உன் இறுதி முடிவை நினைத்து கொள் !
( முப்பத்தைந்து வயது நான் அறுபத்தைந்து வயது என்னை நோக்கி வெகு வேகமாக சென்று கொண்டு இருக்கிறேன்)
>
18 comments:
தல இன்னும் நிறைய வருஷம் இருக்கு, அதுக்குள்ளே ஏன் இத்தனை சிந்தனை.
மரணம் தேதி தெரிந்துவிட்டால் வாழ்வின் மகிழ்ச்சி போய்விடும் என்று சொன்னார்கள்
மரணம் நிச்சயம் உண்டு.. அந்த பயத்தை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு சந்தோஷமாக (அடுத்தவர்களுக்கு தீங்கு செய்யாமல் இருந்தால் வருவது) வாழ்ந்துவிட்டு போவோமே
நாம் இறந்தால் மாவட்டத்துக்கு வேண்டாம் அட்லீஸ்ட் பிறந்த ஊருக்காவது தெரியனும்..
யாருக்கும் நன்மை செய்யாமல் இருக்கலாம்! ஆனால் ? எவருக்கும் கெடுதல் செய்யாதே!]]
சி்றப்பா சொன்னீங்க.
இதை செய்தலே அடுத்தவருக்கு மட்டுமல்ல நமக்கு நாமே செய்துகொள்ளும் மிகப்பெறும் நண்மை.
இன்னும் ஒரு நூறாண்டு இரும்.
வாழ்க்கை நிம்மதியாக இருப்பதைவிட, மரணம் நிம்மதியாக இருக்க வேண்டும் அதுதான் முக்கியம்!
இந்த வாக்கியம் நிறைய விஷயங்களை சொல்லுது தல.
"வாழ்க்கை நிம்மதியாக இருப்பதைவிட" - இதில் வாழ்க்கையில் நிம்மதி என்பது நிறைவான வாழ்க்கையா, நிறைவான வாழ்க்கையின் வரைமுறைதான் என்ன? அந்த வரைமுறை யாரால் தீர்மானிக்கப்பட வேண்டும்? நாமா? நாம் என்றால் அதில் சுயநலம் இல்லாமல் இருக்குமா? நமக்கு நிறைவு என்பது பிறருக்கு எந்த வகையிலும் கெடுதலாக அமையாதிருக்குமா? இப்படி பல....
ரொம்ப விலாவாரியா சொல்லி இருக்கீங்க தல. நல்ல பதிவு
//இங்கிலீஷ் மீடியம் படித்து இருக்கலாமோ ?//
என் இனம் ஜீவன் நீங்க....
மரணம் என்பது முள்ளில் இட்ட சேலையாக கிழியக்கூடாது.
எண்ணெயில் இட்ட தலைமுடியாய் வெளிவர வேண்டும் என்று என்னுடைய ஹழ்ரத் சொல்ல கேட்டிருக்கிறேன்.
பல சிந்தனைகளை ஏற்படுத்துகிறது உங்கள் பதிவு !!!
அடங்கொன்னியா........!! தலைவரே...... என்ன ப்ரேண்டு அடுச்சீங்கோ.....??
அன்பு நண்பர் ஜீவன் ,
மிக அருமையான பதிவு .இன்றைய காலகட்டத்தில் செய்யும் தவறை தவறு என்று உணர்பவர்கள் எத்தனை பேர் ?பணம் ,பதவி ,சொத்து இதற்காக தான் மனிதன் தவறு செய்கிறான் .சுயநலத்திற்காக வாழாமல் சிறிது பிறர்க்காகவும் வாழலாம் .அது தான் தவறுக்கு பிராயசித்தம் ..மன ஆறுதல் ,,,,,,,,
ஜீவன்,வாழ்வை விளையாட்டாய் இல்லாமல் கொஞ்சம் சிந்திக்க வைக்கும் பதிவு.
எப்படிங்க இப்படி யோசிக்கறீங்க?
/*வாழ்க்கை நிம்மதியாக இருப்பதைவிட, மரணம் நிம்மதியாக இருக்க வேண்டும் அதுதான் முக்கியம்!
*/
வாழ்க்கையும் நிம்மதியாக இருக்க வேண்டும், மரணமும் நிம்மதியாக இருக்க வேண்டும்.
/*யாருக்கும் நன்மை செய்யாமல் இருக்கலாம்! ஆனால் ? எவருக்கும் கெடுதல் செய்யாதே! */
எல்லோரும் இப்படி இருந்தாலே உலகில் பாதிக்கு மேல் பிரச்னைகள் தீர்ந்து விடும்
ஒவ்வொருவருக்கும் சுயபரிசோதனை அவசியம்தான் நண்பா. அவ்விதம் செய்து கொண்டால் நன்மைகளே. ஆனால் மரணம் பற்றி யோசிச்தேயில்லை.
//அறுபத்தைந்து வயது என்னிடம் முப்பத்தைந்து வயது நான் ஆலோசனை கேட்டு நடந்து கொண்டால் இனியும் தவறு ஏதும் செய்யாமல் இருக்கலாம் அல்லவா ?//
முப்பத்தைந்திலேயே அறுபத்தைது மாதிரி ஃபீல் பண்ணா அறுபத்திஐந்தில் என்னாவா ஃபீல் பண்ணுவிங்க!
பழமை எண்ணம் கொண்டவர்கள்தான், இது போல் தெரிந்தோ தெரியாமலோ முனோக்கி பாயும் சிந்தனையை வெட்டுவார்கள், மரணத்தை காட்டி அச்சுறுத்தும் கருத்துக்களை ஒரு விதத்தில் உடைதுள்ளிர்
மரணத்தை பற்றி மாவோ சொல்லியதுதான் நினைவுக்குவருகிறது ஒருவருடைய மரணம் என்பது மலையை விட கனமானதாக இருக்கவேண்டும், மாறாக காற்றில் பறக்கும் பஞ்சாக அமைத்துக்கொல்லகூடாது.
நல்ல சிந்தனை ஜீவன். அறுபத்தைந்து, முப்பந்தைந்து நேர்காணல்.
இந்த வயதில் செய்ய முடியாததை அந்த வயதில் கண்டிப்பா செய்ய முடியாது,
இறப்பு எனபது மிகச் சாதரணமானதாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்வதில் தான் முரண்பாடுகள் இருக்கச் செய்கின்றன.
அத்தருணத்தில் உணருவது என்பது மிகவும் கொடுமையான ஒன்று.
இப்போதே நல்லது செய்து அறுபத்தைந்து வயதுக்கு தயார் செய்து கொள்வோம் ஜீவன்.
உங்களை நீங்களே விலக்கி வைத்துப் பார்த்த உங்க சிந்தனை அனைவரையும் யோசிக்க வைக்கும்.
அருமையான பதிவு நன்றி ஜீவன்!!
MGR வாழ்ந்து விடாத வாழ்க்கையா,சிவாஜி கணேசன் வாழ்ந்து விடாத வாழ்க்கையா ? அவர்களும் சிம்பிளாக செத்துத்தானே போனார்கள் ? //
ஆனா பிரமாண்டமா சிலையும், சமாதியும் வெச்சிருக்காங்களே ஜீவன் !!!
இப்போது ஒரு எண்ணம்!!!!!
நான் அறுபத்தைந்து வயது வயோதிகனாக மாறி மரண படுக்கையில் நாட்களை எண்ணி கொண்டு இருக்கிறேன்! முப்பத்தைந்து வயது மனிதனாக வாழ்ந்து கொண்டும் இருக்கிறேன் இரண்டுமே நான்தான்!!!
ரொம்பவும் பாலகுமாரன படிச்சு வெச்சுக்கீங்கன்னு நெனக்கிறேன், கற்பனை குதிரைய அப்படியே அனாசயமா தட்டி விட்டுருக்கீங்க. ஆனா நீங்க சொல்லியிருக்கும் மெசெஜ் ஆழமும், அர்த்தமுமானது.
Truely said
அருமை அமுதன் !!!
Post a Comment