மனோரா (ஒரு சுற்றுலாத்தலம் )மனோரா
இது தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.எங்கள் ஊர் பக்கம் உள்ள ஒரு சிறந்த சுற்றுலாத்தலம் இது..! சில நாட்கள் முன்னர் மனோரா வழியாக ஒரு திருமணத்திற்கு செல்ல நேர்ந்தது..! படம் புடிச்சு பதிவா போடலாமேன்னு...........!


மனோரா பற்றி


இது தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னனால் கி .பி 1814 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.ஆங்கில அரசுக்கு ஜால்ரா மன்னராக இருந்த இவர் ஆங்கிலேயர்களுக்கும் நெப்போலியனுக்கும் நடந்த போரில் ஆங்கிலேயர் வென்றதன் நினைவாக இந்த மனோராவை உருவாக்கினார் . 75 அடி உயரம் கொண்ட மனோரா அருங்கோண வடிவில் எட்டு அடுக்குகளை கொண்டது. மராட்டியர்களின் கட்டிடகலைக்கு உதாரணமாய் விளங்கும் இந்த கோட்டையை சுற்றி மதில் சுவரும் அதன் உள்ளே அகழியும் இருக்கிறது. கடற்கரை ஓரத்தில் இருக்கும் இந்த உப்பரிகை போல் அமைந்த கோட்டைக்கு சரபோஜி மன்னர் ராணியுடன் சில சமயங்கள் வந்து போனதாக தகவல்கள் உண்டு. துப்பாக்கிகள்,மற்றும் ஏனைய ஆயுதங்கள் வைத்துகொள்ளும் இடமும் இங்கே உண்டு.


இருப்பிடம் மற்றும் செல்லும் வழி

பட்டுக்கோட்டையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் இருபதாவது கிலோமீட்டர் தொலைவில் சேதுபாவாசத்திரம் உள்ளது அங்கிருந்து இடது புறம் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மனோரா உள்ளது .

பட்டுக்கோட்டையில் இருந்து மல்லி பட்டினம் வழியாக பஸ் வசதி உள்ளது.

கன்னியா குமரி -சென்னை கிழக்கு கடற்கரை சாலை இந்த மனோராவை ஒட்டியே செல்கிறது ..!

மனோரா பார்வை நேரம் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை விடுமுறை நாட்களிலோ மற்ற நாட்களிலோ மதியத்துக்கு பிறகு அங்கு செல்வது நல்லது..!

உட்புறம் உள்ள அகழி
மேலே செல்ல படிக்கட்டுஉள்ளே படிக்கட்டு
உட்பகுதிதற்போது இரண்டு அடுக்குவரைதான் மேலே ஏற அனுமதிக்க படுகிறார்கள்

கீழே உள்ள படம் மனோராவிலிருந்து கடற்கரைஇது கடற்கரையில் இருந்து மனோரா

எல்லா படங்களும் செல் போனில் எடுத்தது..!
படங்களை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள் ....!


.
>

34 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமை!

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது மனோரா படத்தை வரைந்து வண்ணம் தீட்டித் தீட்டி ரசித்தது வண்ணங்களாய் கண் முன்னால் வந்து போகின்றன!

S.A. நவாஸுதீன் said...

ஆகா. தல இது நம்ம மனோராவாச்சே. எந்தப் பெருநாள் ஆனாலும் மாலைநேரம் இதுதானே நம் பகுதி மக்களுக்கு சுற்றுலாத்தலம், பொழுதுபோக்கு எல்லாமே.

போட்டோஸ் எல்லாமே கலக்கலா இருக்கு தல.

வானம்பாடிகள் said...

கலக்கல் படங்கள். :)

கதிர் - ஈரோடு said...

சமீபத்தில்தான் இது குறித்து தொலைக்காட்சி செய்தியில் பார்த்தேன்...

படங்கள் அருமை ஜீவன்

sanjeevi said...

அறிமுகத்துக்கு நன்றி!! எட்டாவது தளத்துக்கு நீங்கள் எப்போதேனும் சென்ற அனுபவம் உண்டா? படங்கள் மிகவும் அருமை!! வாழ்த்துக்கள்!!

தாரணி பிரியா said...

படம் எல்லாம் சூப்பர். ஒரு தடவை அந்த இடத்துக்கு போய் பாக்கணும் போல தோணுதே

அ.மு.செய்யது said...

இந்த மாதிரி புராதன இடங்களுக்கு விசிட் அடிப்பதென்றால் எனக்கு கொள்ளைபிரியம்.

அடுத்த வாட்டி போகும் போது சொல்லுங்க தல...!!!! போட்டோக்கள் அருமை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)))

கவிதை(கள்) said...

உபயோகமான பதிவு

வாழ்த்துக்கள் ஜீவன்

தொடர் பதிவுக்கு அழகித்துள்ளேன் வாருங்கள்

விஜய்

பின்னோக்கி said...

இதுவரை கேள்விப்படாடத பார்க்காத இடம். நன்றி. புகைப்படங்கள் நேரில் அந்த இடத்தை பார்த்தது போல ஒவ்வொரு இடத்தையும் அருமையாக எடுத்திருக்கிறீர்கள்.

ஒரு படத்தில் அகழி சிறியதாக இருப்பதைப் போல இருந்தாலும், அடுத்த படத்தில் அதன் பிரம்மாண்டம் தெரிகிறது.

தியாவின் பேனா said...

அருமை அருமை அருமை நல்ல பதிவு

பிரியமுடன்...வசந்த் said...

கடைசிப்படம் நச்சுன்னு எடுத்துருக்கீங்க ஜீவன் நல்லாயிருக்கு

ஜெட்லி said...

படங்கள் அருமை ஜி...
அந்த பக்கம் வந்த கண்டிப்பா பார்க்க வேண்டிய
இடம்

அமுதா said...

அழகு... அருமை... பகிர்வுக்கு நன்றி... தஞ்சை பக்கம் வந்தால் செல்ல நினைவில் வைத்துக் கொள்கிறேன்

ராமலக்ஷ்மி said...

தகவல்களுக்கு நன்றி ஜீவன். கடைசிப் படம், ஆகா அற்புதம்.

அபுஅஃப்ஸர் said...

ஆஹா கலக்கல்

நான் அந்த மனோராவில் உச்சிவரை சென்று இருக்கிறேன், ஏதாவது விஷேசம் நாள் என்றாலோ நண்பர்களுடன் பொழுது போக்கவோ அங்கே செல்வது வழக்கம். கட்டிடம் பழுதுதடைந்திருப்பதால் யாரையும் உள்ளே செல்வதற்கு அனுமதிப்பதில்லை

அழகான படங்களுடன் விளக்கமும் அருமை, வாழ்த்துக்கள் ஜீவன்

கலகலப்ரியா said...

அருமைங்க..

//தற்போது இரண்டு அடுக்குவரைதான் மேலே ஏற அனுமதிக்க படுகிறார்கள்//

போதும்... (யப்பே..)

Mrs.Menagasathia said...

இப்போழுதுதான் மனோரா பற்றி தெரிந்துக்கொண்டேன்.பகிர்வுக்கு நன்றி!!

அத்திரி said...

ஆஹா தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஊரா......அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

டவுசர் பாண்டி... said...

உலக வலைப்பதிவுகளில் முதல் முறையாகன்னு பெரிசா போடலாம்....அருமையான தகவல்

பட்டுக்கோட்டையில இருந்து எந்த மார்க்கத்துலன்னு போட்ருக்கலாம்....

எந்த நேரங்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப் படுவர் என்கிற தகவலும் தேவை...

இப்படிக்கு நிஜாம்.., said...

//பட்டுக்கோட்டையில இருந்து எந்த மார்க்கத்துலன்னு போட்ருக்கலாம்..//

பட்டுக்கோட்டையில் இருந்து மல்லிப்பட்டினம் வழியாக கோட்டைப்பட்டினம், மீமிசல்,தொண்டி,இராமநாதபுரம்,இராமேஸ்வரம் செல்லும் அனைத்துப் பேரூந்துகளிலும் செல்லலாம். மல்லிப்பட்டினம் தாண்டி ஒரு டாஸ்மாக் கடை அடுத்த நிறுத்தம் சின்னமனை என்ற கிராமம். அங்கிருந்து உள்ளே சென்றால் இந்த மனோராவின் தரிசனம் கிடைக்கும். தலைவர் கலைஞரின் புதையல் படத்தில் இந்த மனோராவைப் பார்க்கலாம். அப்பறம் தலைவரே படங்கள் மிகமிக அருமை.பதிவும் சூப்பர். நானும் அதிரை காதிர்முகைதீனில் முத்தெடுத்தவன் தான்.

மங்கை said...

Arumai aaaana photos...info...

thanks amuthan

RAMYA said...

அருமை! எல்லா படங்களும் அற்புதமா வந்திருக்கு.

படங்களுடன் கூடிய விளக்கங்கள் அபாரம்!!

இந்த இடத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டிவிட்டது.

ம்ம்ம்.. விரைவில் பார்க்க முயற்ச்சிக்கிறேன்.

Thevesh said...

தகவல்களுக்கு நன்றி ஜீவன்.
படங்கள் எல்லாம் அருமையாக
எடுத்துள்ளீர்கள்.

Rajalakshmi Pakkirisamy said...

:):)

எம்.எம்.அப்துல்லா said...

:)

ஈ ரா said...

படங்கள் அருமையாக உள்ளன...ஏதாவது புதுப்பித்தல் வேலை நடந்ததா?

சி. கருணாகரசு said...

மிக அருமையான பதிவு... நேர்தியாய் எடுக்கப்பட்ட நிழற்படத்தில் "ஜீவன் இருந்தது"

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

விடுமுறையில் ஊருக்குப் போனால் மனோராவுக்கு போகாம இருக்க மாட்டோம், படங்களுடன் செய்திகளை தந்ததற்க்கு நன்றி. Really Superb!!

அகல் விளக்கு said...

நண்பரே.. தங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்.

http://agalvilakku.blogspot.com/2009/11/10.html

ஏற்றுக்கொள்வீரா??

அன்புடன் புகாரி said...

போன் வருடம் ஊர் வந்தபோதும் மனோரா சென்று வந்தேன். நான் ஒரத்தநாட்டுக்காரன். பட்டுக்கோட்டையில் மணம் முடித்தவன். கனடாவில் வாழ்பவன். தஞ்சாவூர் மக்களைக் காணும்போது மகிழ்ச்சி.

அப்படியே அலையாத்திக் காடுகளுக்கும் சென்றேன். ஒரு கவிதையும் எழுதினேன்.

என் வலைப்பூவில் பார்க்கலாம்

அன்புடன் புகாரி

Ponchandar said...

பேராவூரணி நண்பன் வீட்டிலிருந்து மனோரா சென்றது ஞாபகம் வருகிறது. எட்டாவது அடுக்கு வரை சென்றிருக்கிறேன். வழவழப்பான சுவர்களில் கையில் கிடைத்ததை வைத்து ஆண், பெண் பெயர்கள் கிறுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதனால்தான் தற்சமயம் இரண்டு அடுக்கு வரை அனுமதிக்கிறார்களோ ?

raja said...

hai i am raja. i am stadying pattukkottai government higher sec school in 2005. next i am stady in pattukkottai polytechnic college in 2009.
Next i am working in chennai HCL INFO SYSTEMS gundy branch.
thanks&Reg
pattukkottai
Raja.D
NainanKulam

ganesh elakkuvan said...

amutha ,payanulla nalla vishayam malarum ninaivugal pol manora ninaivugal vanthu manathil mothukindrana.A.G.Elakkuvan.Athivetti.