மதம் படைத்தவர்கள்

இப்போதைய கால கட்டத்தில் காவல் துறை, நீதிமன்றம்,ராணுவம் மற்றும் நாடு என்ற அமைப்பு அதெற்கென ஒரு கட்டமைப்பு எல்லாமே உள்ளது. இப்படி எல்லாம் இருந்தும் முழுமையாக சட்டம் ஒழுங்கை காக்க முடியவில்லை. பல சட்ட மீறல்கள் நடக்கத்தான் செய்கிறது. அநீதி யான செயல்கள் பல நடக்கின்றன அனைவருக்கும் சட்டம் சமமாக இல்லை பணம் படைத்தவர்களுக்கு சட்டம் வளைகிறது .இது இன்றைய நிலை .!


இதே பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மக்களின் வாழ்க்கை அமைப்பு எப்படி இருந்திருக்கும் ..? ஒரே நிலப்பரப்பில் பல நாடுகள் ..! ஒருநாட்டில் ஒருவன் மன்னன் அவனே அடுத்த நாட்டில் கொள்ளைக்காரன்..! சிறியதும் பெரியதுமான ஏகப்பட்ட ராஜ்ஜியங்கள் அங்கங்கே அவரவர் வைத்ததுதான் சட்டம்.

ஆயுதங்களே ராஜ்யங்களை கொடுத்ததன ,கெடுத்தன ..அப்பாவிகளும்,பொதுமக்களும் அநியாயமாக பாதிக்க பட்டனர்.அதிக படையையும் ஆயுதங்களையும் கொண்டவன் மாவீரன் ..! பெருமளவில் மக்களை கொன்றவன் சக்ரவர்த்தி..! பாதிக்க பட்டவன் முறையிட நாதியில்லை .

இப்படி ஒரு காலகட்டத்தில் மக்களை நெறி படுத்த என்ன செய்ய முடியும் திருடனாய் பார்த்து திருந்தினால்தான் உண்டு.
இப்படி பட்ட நிலையில் மக்களை அன்பு வழியில் நடக்க செய்து அவர்களை நெறிபடுத்த உருவாக்க பட்ட முயற்சிதான் மதம்.
அந்த முயற்சியில் மாபெரும் வெற்றியை அடைந்து இருக்கிறார்கள் மதத்தை உருவாக்கிய மகான்கள் ..!

மக்களுக்கு இறையுணர்வை கொடுத்து அவர்களை அன்பு வழியில் மாற்றியது மதம். பல மன்னர்களும் மதத்தை போற்றவே நாடும் அமைதியை நோக்கி செல்ல துவங்கியது.

தற்போதைய மத சண்டைகள்

விலங்குகளிடம் இருந்து மனிதனை வேறுபடுத்த உருவாக்க பட்ட மதம் இன்று மனிதனை மிருகமாக்கி கொண்டு இருகின்றது. ஆனால் இந்த நிலை மாறி அனைத்து மக்களும் ஒன்றுபட்டு வாழ்வார்கள் . இதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு .ஒரு சமுதாய மாறுதல் அடைய பல நுற்றாண்டுகள் ஆகலாம். அடிப்படையில் ஹிந்துவோ,முஸ்லிமோ,கிறிஸ்தவரோ அனைவருமே அன்பானவர்கள்தான். சிலர் செய்யும் சில செயல்களே மத சண்டைக்கு காரணமாகிறது. பழைய வரலாறு விளக்கப்பட்டு மத வெறி தூண்டபடுகிறது . அதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு நாகரிகமான ஒற்றுமையான மத சண்டைகள் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும் ..? அல்லது நான் என்ன செய்ய வேண்டும் ..?

எனக்கு இஸ்லாமிய நண்பர்களும் உண்டு ,கிறிஸ்தவ நண்பர்களும் உண்டு
அவர்கள் மதத்தின் சிறப்புகளை பற்றி அவர்களிடம் சொன்னால் மகிழ்ச்சி அடைகிறார்கள்.அவர்களும் என் ஹிந்து மத சிறப்புகளை சொல்லுகிறார்கள்.
அதே சமயம் நான் அவர்கள் மதத்தில் உள்ள குறைகளை சொன்னால் அவர்களுக்கு பிடிக்க வில்லை உன் மதத்தில் இல்லாத குறைகளா..? என திருப்பி அடிக்கிறார்கள். நான் என் ஹிந்து மத குறைகளையும் சொல்லுவேன் என சொன்னால் அதற்க்கு அவர்கள் பதில்

உன் மதத்தை குறை சொல்ல உனக்கு உரிமை உண்டு ..! ஆனால் என் மதத்தின் சிறப்புகளை நீ சொன்னால் ஏற்றுகொள்வேன் ..! குறை சொல்ல உனக்கு உரிமை இல்லை ..!

....இதுதான் அவர்கள் பதில்

கிட்ட தட்ட அவர்கள் சொல்வது சரிதான் ஜாதி இல்லை மதம் இல்லை என பேருக்கு வேண்டுமானால் சொல்லி கொள்ளலாம் ஆனால் எனக்கு உயிர் நண்பனாக இருக்கும் ஒரு இஸ்லாமியன் கூட என்னை ஹிந்துவாகத்தான் பார்க்கிறான் உணமையை சொன்னால் நானும் அவனை முஸ்லிமாய் தான் பார்க்கிறேன் .

அவன் என்னை இந்துவாய் பார்க்கும் பட்சத்தில் என் மேல் ஏகப்பட்ட குறைகளை வைத்துகொண்டு அவன்மேல் குறை சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கிறது
அவன் நினைப்பதும் சரிதான்.

அறிவியற் கூறுகள் பெருகி செழித்திருக்கும் இந்த காலத்திலேயே பல்வேறு மூட நம்பிக்கை பழக்கங்களும் பெருகிவருகின்றன.

அப்படி இருக்க மதங்களை தோற்றுவித்த அந்த காலங்களில் எவ்வளவோ மூட பழக்கங்கள் இருந்திருக்க தானே செய்யும் அவை தற்கால அறிவியலுக்கு எப்படி பொருந்தும் .?

அந்த அறிவியலுக்கு பொருந்தாத அந்த நம்பிக்கையை என் மாற்று மத நண்பன் புனிதமாக கருதி போற்றும்போது அதன் குறைகளை கண்டுபிடித்து சொல்லி அவன் மனதை நான் ஏன் புண்படுத்த வேண்டும்..? அப்படி சொன்னால் அவன் நட்பை இழப்பதோடு மத உரசலுக்கும் காரணமாய் அமைந்து விடாதா ..?

ஒருவர் தான் மத சம்பிரதாயங்களை அடுத்தவருக்கு எந்த தொல்லையும் கொடுக்காமல் செயல் படுத்தும்போது அதை ஒருவர் எட்டிபார்த்து குறை சொல்லுவது அநாகரிகம் இல்லையா ..?





.
>

14 comments:

நட்புடன் ஜமால் said...

உங்களை நண்பராகத்தான் நான் பார்க்கிறேன்

நீங்கள் ஹிந்து கோட்பாட்டை பின்பற்றுபவராக நான் நினைத்தாலும் அதிலும் தவறொன்றுமில்லையே

Anonymous said...

அன்பும் மட்டுமே நிரந்தரம்
ஆறடி மண் கூட இல்லை..... நாம் எல்லாம் நட்போடு இருக்கிறோம் இதுவே மிகப் பெரிய சந்தோஷம் இருப்போம் என்ற நம்பிக்கை அதை விட சந்தோஷம்...

பொன் மாலை பொழுது said...

எனக்கும் உண்டு. ஆனால் அவர்களை நண்பர்களாகவே பார்க முடிகிறது. அவர்கள் சார்ந்த மதம் நினைவில் வருவதில்லை. பல நேரங்களில் அவரவர் மதங்களை பற்றி விமர்சித்துகொன்டாலும் அவைகள் வெறும் செய்தி பரிமாற்றமாகவே இருக்கும். உண்மையான அன்பும் நேசமும் இருக்கும் இடங்களில் ஜாதி மத இன நிற வேறுபாடுகள் தோன்றுவதில்லை. இது வெறும் தத்துவ பிதற்றல் இல்லை. இப்படித்தான் இருக்க முடிகிறது எனக்கு. வேறுபாடு பாராட்டும் இடத்திலிருந்து விலகி நிற்பதும் எளிது.

Thamira said...

உங்களது இதுபோன்ற பொது விஷயம் குறித்த பதிவுகள் நன்றாக உள்ளன. நல்லதை யார், எப்படிச் சொன்னாலும் கேட்டுக்கொள்ளலாம் போன்ற சப்ஜெக்டுகள்தான்.

ஆனால் அவை மேலோட்டமாக இருக்கின்றன. ஆழ்ந்த வாசிப்பிற்குப் பிறகு, அதிக உழைப்பில் இவை எழுதப்பட்டால் இன்னும் உயர்ந்து ஒரு சிறந்த கட்டுரையின் அந்தஸ்தைப் பெறும்.

பொன் மாலை பொழுது said...

தமிழ் .....என் தளத்தில் ஒரு அருமையான ,ராஜாவின் பாடல் ஒன்றை இட்டுவைதுள்ளேனே! அது பற்றி எதுவும் சொல்லவில்லை? அதை இடும்போது உங்கள் நினைவுகள் வந்தன. அந்த பாடலை நான் பெற வழி காட்டினீர்கள்
அல்லவா!

எம்.எம்.அப்துல்லா said...

நீ மனுஷய்யா.

தோழி said...

நேர்மையாக அணுகியிருக்கிறீர்கள். கொஞ்சம் நீளமாய் இருக்கிறது பதிவு.

டுபாக்கூர் பதிவர் said...

புரிதல்கள் மட்டுமே இறுக்கம் தளர்த்தும். அதற்கு உங்களின் பதிவுகள் உதவினால் எனக்கு மகிழ்ச்சியே!

அப்துல்மாலிக் said...

மதத்தையும் தாண்டி மனம் எப்போதும் இருக்கும் உலகம் உள்ளவரை

ஹேமா said...

அருமையான சிந்தனை ஜீவன் அமுதன்.ஒருவரின் நம்பிக்கையை விருப்பங்களை அடுத்தவர் தடுக்கமுடியாது.அது தனிப்பட்ட சுதந்திரம்.அது பெற்றவர்களாய் கணவராய் மனைவியாய் பிள்ளைகளாய் இருந்தால் கூட !

Rama_Bangalore said...

Vanakkam, I am not able to use Tamil Keyboard and I am giving my opinion in English. There is one thing which is beyond the boundaries of Religion that can unite us all and sustain the universe. In Tamil it is called "Aram" and it was well defined by Tiruvalluvar. I will explain the simplest form of "Aram". When you ride a car and encounter RED signal, you stop and then you proceed after you get the Green Signal. By doing this simple Aram, you are safe and you allowed others also to live unhurt. "Aram" is the one that sustains the functioning of the universe and if everyone adopts it, the universe will have no conflicts at all. The direct opponent of "Aram" is "Selfishness" or "Addiction to Materialistic Pleasure". Anyone who does not care for others during his actions is working against "Aram". I read somewhere terms like "Nallaram". In my opinion, Edhu Nalladhu alladhadho, Adhu Aram aagave irukka mudiayadhu.

வானவன் யோகி said...

உண்மைய...இப்படி...நடுவீதியில்...
போட்டு..உடைக்கக்கூடாது...

சொல்லிட்டன்...ஆம்மா...

மனசாட்சி உள்ளவன் உண்மை சொல்லத் தயங்குவதில்லை...

வாழ்த்துக்கள்...நேர்மையான எழுத்திற்கு

Sriakila said...

நல்ல சிந்தனை.

ஆறறிவு உள்ள மனிதனாகப் பிறந்தவனுக்கு அன்பு ஒன்று மட்டும் நிலையாக இருந்தால் போதும். சில பேர் பேச ஆரம்பித்தவுடனேயே "நீங்கள் என்ன ஜாதி?" என்றெல்லாம் கேட்கிறார்கள். இது மிகவும் அநாகரிகமானது. நல்ல பதிவு!

Anonymous said...

சாதியும் மதமும் சமயுமும் காணா
ஆதிய அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.


Utube videos:
(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
www.youtube.com/watch?v=FOF51gv5uCo


Online Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454