பிடித்த பாடல்கள் -தொடர் பதிவு

நண்பர் வால்பையன் அருணின் அழைப்பின் பேரில் இந்த பிடித்தபாடல்கள் பதிவு
அழைப்பிற்கு நன்றி அருண்...!

இந்த பதிவில் எனக்கு பிடித்த பழைய ,கருப்பு வெள்ளையில் வெளிவந்த பாடல்களை பகிர்ந்து கொள்கிறேன்.


இந்த பாடலை முன்பு பலமுறை கேட்டதுண்டு ஆனால் பெரிதாக கவனித்ததில்லை பழைய பாடல்களா..? புதிய பாடல்களா..?என்ற லியோனியின் பட்டிமன்றம் ஒன்றில் இந்த பாடலை ஒரு பேச்சாளர் இப்படி விவரித்தார் அதன் பிறகு இந்த பாடலின் ரசிகனாகிவிட்டேன்..!

அதாவது... ஒரு காதலன் தன் காதலியை நிலவுக்கு ஒப்பிட்டு பாட நினைக்கிறான் ஆனால் ..? நிலவோ உடையில்லாமல் இருக்கிறது என்ன செய்வது உடனே இப்படி பாடுகிறானாம்...


ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ


இந்த பாடலின் வீடியோ லிங்க் கிடைக்கல அதனால ஆடியோ மட்டும்

இங்கே


எவ்வளவு வருடங்கள் ஆனாலும் மூப்பே அடையாத ஒரு பருவ இளங்குமரி போன்ற பாடல் இது ..! புரட்சி தலைவரும் புரட்சி தலைவியும் போட்டி போட்டுகொண்டு ஆட, டிஎம்எஸும் பி . சுசிலாவும் போட்டி போட்டு கொண்டு பாட ஆஹா நினைத்தேன் வந்தாய் நூறு வயது என்ன ஒரு அருமையான பாடல் ..!







..........


பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலன் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

இறைவன் இருக்கும் இடத்தை தெளிவாக்குகிறார் வாலி பாபு பட இந்த பாடலில்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...





..........


அங்கம் குறைந்தவனை ......அழகில்லா ஆண்மகனை .......
மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா .......வீட்டில் மணம்பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா ........

மண்பார்த்து விளைவதில்லை........ மரம் பார்த்து படர்வதில்லை.......கன்னியரும் பூங்கொடியும் கன்னையா


டி எம் எஸ்- பி .லீலா குரலில் சிவாஜி சரோஜா தேவி பாகபிரிவினையில் அழகிய இந்த பாடல் ...


தாழையாம் பூமுடித்து தடம் பார்த்து நடைநடந்து .......





........

இளைய ராஜாவில் ராஜ ராஜாங்கத்தில் வட்டத்துக்குள் சதுரம் பட
இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்


>

16 comments:

thiyaa said...

super thalaiva

நட்புடன் ஜமால் said...

உங்க இரசனையே தனிதானே அண்ணா

ஹுஸைனம்மா said...

நல்ல பாடல்கள். அதிலும் கடைசியான, இதோ இதோ.. பாடல் கேட்டு ரொமப் வருஷமாச்சு.. நன்றி.

Anonymous said...

முதல் ரெண்டும் கடைசி பாடலும் ரொம்ப விரும்பி கேட்டேன் தமிழ்

ஹேமா said...

நினைத்தேன் வந்தாய்...கேட்கக் கேட்க அலுக்காத பாட்டு.அந்தக் காட்சிகளும்தான் தொழில்நுட்பங்கள் இல்லாத நேரத்திலேயே எவ்வளவு அழகு.3 தரம் இப்பவே கேட்டிட்டேன்.அடுத்த பாடல் ஏதோ கனவுபோல ஒரு ஞாபகம் வருது.ஒருவேளை பார்த்திருப்பேன்போல.எல்லாத் தெரிவுகளுமே கேட்க இதமாயிருக்கு ஜீவன் !

க.பாலாசி said...

நீங்களும் என்னாட்டமாதிரிதானா... எனக்கும் இந்த பாடல்கள் ரொம்ப பிடித்தமானவைங்க... அதுவும் தாழையாம் பூ முடித்து சொல்லவே வேண்டாம்...அப்படியே சாப்பிடுவேன்...

Anonymous said...

ரசனை மிக்க பாடல்களை ஞாபகப்படுத்திவிட்டீர்கள் !

விஷாலி said...

என்னதான் இன்றைய பாடல்கள் வந்தாலும் அன்றைய பாடல்களை மறக்க இயலாது நன்றி மற்றும் நினைவுகள் தொடர வாழ்த்துக்கள் நண்பரே

மனோ சாமிநாதன் said...

எல்லாமே அருமையான தேர்வுகள்! குறிப்பாக ‘தாழையாம் பூ முடித்து; என்றுமே நினைவில் வாழும் ஒரு பாடல்!!

Chitra said...

நல்லா இருக்குதுங்க.... :-)

விஜி said...

தமிழு சொன்னபோது நம்பலை, இப்ப நம்பறேன்,நீங்க எங்களுக்கு அப்பச்சி தான்னு :)))

பொன் மாலை பொழுது said...

அவ்வளவுதானா ? இது பத்தாதே ராஜா!
--

வால்பையன் said...

கலக்கிடிங்க தலைவா!

SurveySan said...

good. raja song is a big favorite of mine.

பொன் மாலை பொழுது said...

தமிழ், profile படம் மாத்தீட்டீங்க, முன்ன இருந்ததே நல்லாத்தான் இருந்தது.
இது என்ன கருப்புகண்ணாடி போட்டுகிட்டு.........?????.................

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்
வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம் .ஜீஜிக்ஸ் தளத்தை பற்றிய ஒரு ப்ளாகரின் விமர்சனத்தை காண இங்கே கிளிக் செய்யவும் http://adrasaka.blogspot.com/2010/08/500.html