வைகோ...!!!





அரசியல்வாதிகளில்
யாரும் சரியானவர்கள் இல்லை என குறைபட்டு கொள்வோம் அதே சமயம் சிறப்பாக செயல்படகூடிய ஆற்றல் மிக்க அரசியல் தலைவர்கள் இருந்தால் அவர்களை கண்டுகொள்ளவும் மாட்டோம். இதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். இப்போது முன்னே தெரிவது வைகோ...!

இவரை பற்றி பொதுவானவர்களின் அபிப்ராயங்கள் என்ன..?

சிறந்த பேச்சாளர்

பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல் பட கூடியவர்

உலக வரலாறு அறிந்தவர்

போராட்ட குணம் கொண்டவர்

இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களிடமும் நன் மதிப்பு பெற்றவர்

சிறந்த இலக்கியவாதி

விளையாட்டு வீரர்

இன்னும் பல விஷயங்கள் சொல்லலாம்.


இவரை குறை சொல்லுபவர்கள் என்ன சொல்லுகிறார்கள்..?

மாறி மாறி வைத்து கொண்ட அரசியல் கூட்டணிகள்...! இதுதான் அவர்மீது சொல்ல படுகிற முக்கிய குற்றசாட்டு...! இன்றய அரசியல் சூழ் நிலையில்
கூட்டணி மாறுதல் ஒரு விஷயமே அல்ல...!

ஒரு கால கட்டத்தில் தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றி அமைக்க போகிறவர் என எதிர்பார்க்கபட்டவர். சென்ற இடமெங்கிலும் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்தார். ஆற்றலும்,திறமையும்,துடிப்பும் மிக்க ஒரு அரசியல் தலைவர் ஏன் இன்னும் அவருக்குண்டான இடத்தை அடையவில்லை...? ஆரம்ப காலத்தில் அவருக்கு இருந்த ஆதரவு தற்போது குறைந்து இருப்பதற்க்கு காரணம் என்ன..?

வைகோ திமுகவில் இருந்து வெளியேற்றபட்ட போது தமிழகத்தில் அப்போது அதிமுக ஆட்சி..! அப்போது அதிமுக ஆட்சியின் மீது மக்கள் கடும் வெறுப்பில் இருந்தார்கள்..!


வைகோ திமுகவில் இருந்து வெளியேற்றபட்ட போது அவர் பின்னால் அணி வகுத்த மக்கள் கூட்டத்தை மூன்று விதமாக பிரிக்கலாம்..!

1. அதிமுக ஆட்சியின் மீது வெறுப்பில் இருந்தவர்கள் ஜெயலலிதாவை வீழ்த்த வந்த சக்தியாக வைகோவை பார்த்து அவர் பின் அணி திரண்டனர்.

2. திமுகவை பிடிக்காதவர்கள், திமுவில் இருந்து விலகி வந்தவர்கள் ஒரு கணிசமான அளவில் திரண்டனர் .

3. இந்த மூன்றாமானவர்கள் மிக முக்கியமானவர்கள்..! வைகோவின் ஆற்றலையும் திறமையையும் கண்டு இவர்தான் தலைவர் ஒரு தலைவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என பெருமளவில் இளைஞர்கள் அவர் பின்னால் அணி வகுத்தனர்.

மதிமுக ஆரம்பிக்க பட்டு முதன் முதலில் சந்தித்த தேர்தல், மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை யில் நடந்த இடைதேர்தல்..! மயிலாப்பூரில் பத்தாயிரத்திற்கு குறைவான வாக்குகள் பெற்றாலும் பெருந்துறையில் மதிமுகவிற்க்கு இரண்டாம் இடம் கிடைக்கவே...! பெரும் உற்சாகம் அடைந்தனர் மதிமுகவினர்.

அதன் பிறகு மதிமுக எந்த ஒரு தேர்தலையும் தனக்கு சாதகமான சூழ்நிலையில்
சந்திக்கவே இல்லை.

அடுத்து வந்த பொது தேர்தலில் தனித்து களம் கண்டது மதிமுக. அப்போது இருந்த அதிமுக எதிர்ப்பு , மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ்,ரஜினி ’’குரல்’’
என ஒரு பெரும் அலையில் மதிமுக எடுபடவில்லை. ஆனால்..! அந்த கடுமையான சூழ்நிலையிலும் கிட்ட தட்ட இருபது லட்சம் ஓட்டுகள் பெற்றது மதிமுக.

காலபோக்கில் பாராளுமன்றதேர்தலில் வைகோ ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்கிறார். வைகோ வுடன் இருந்த அதிமுக எதிர்ப்பாளர்களுக்கு அது பெரும் ஏமாற்றத்தை அளிக்கவே ..! வைகோ வுடன் இருந்த அதிமுக எதிர்ப்பாளர்கள் அவரைவிட்டு பிரிந்தனர்.

மீண்டும் ஒரு சூழ்நிலையில் வைகோ திமுகவுடன் கூட்டு சேர்கிறார் . இப்போதும் பலர் அதிருப்தி அடைந்து விலகுகிறார்கள்.

ஆனால்..! வைகோவை தன் தலைவராக எண்ணி அவரிடம் சேர்ந்த பெருமளவிலான இளைஞர் கூட்டம் ஒருபோதும் அவரை விட்டு விலகவில்லை.
இந்த கூட்டத்தை கொண்டே வைகோ அரசியலில் பெரும் வெற்றியை அடைய முடியும்.

ஆனால்..! இவர்களுக்கும் வந்தது சோதனை ..! ஆட்சி யில் இருந்த ஆளும் வர்கத்தினர் மதிமுகவை சிதைக்கும் பணியில் முழுமூச்சுடன் இறங்கினர். தேன் கூட்டில் ராணிதேனியை தேடி நசுக்குவதுபோல் மதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்து போட்டனர். எந்த ஒரு போராளிக்கும் மனதில் ஒரு சமாதான இடைவெளி உண்டு அந்த இடைவெளியில் மிக சாதுர்யமாக தங்களை சொருகி கொண்டனர் ஆளும் வர்கத்தினர்.

இதற்கு ஒரு உதாரணம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் சக்தியாக விளங்கியது மதிமுக..! ஆனால் இப்போதுஅங்கே மதிமுக தலைகள் யாரும் இல்லை .. ! எல்லோரும் திமுகவில் ஐக்கியம்..! கட்சி மாறியவர்களை குறை சொல்லி பயன் இல்லை நடைமுறை அரசியல் சூழ்நிலையில் தவிர்க்க முடியாமல் நிர்பந்தத்திர்க்கு உட்பட்டு கட்சி மாறிவிட்டார்கள்.

ஆனால்..! வைகோவை மனதில் வைத்துள்ள தொண்டர்கள் இன்றுவரை அவருடன்தான் உள்ளனர். இவர்கள் உறுதியானவர்கள். இன்றளவில் தமிழகத்தில் கிராமங்கள் தோறும் வைகோவை தலைவராக எண்ணி,செயல்பட ஆற்றல் மற்றும் ஆர்வம் இருந்தும் தங்களை வழி நடத்த சிறு தலைவர்கள் இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் ஏராளம்..!

மதிமுகவிற்கு ஏற்பட்ட அதே நிலை சில மாதங்கள் விஜயகாந்தின் தேமுதிக விற்கும் ஏற்பட்டது . சிறுசிறு தலைவர்கள் எல்லோரும் நிர்பந்திக்க பட்டார்கள்
சிலர் கட்சி மாறிபோனார்கள்.சிலர் ஒதுங்கினார்கள்.நன்கு செயல் பட்டு வளர்ந்து வந்த தேதிமுக பல இடங்களில் தொய்ந்து போனது..! ஆனால்...! சட்டென சுதாரித்த விஜய காந்த் புதிய நிர்வாகிகளை நியமித்து தொய்வை போக்கினார்..!
இந்த இடத்தில் வைகோ இதேபோல செயல் பட்டு இருந்தால் இப்போது மேலும் வலிமையுடன் மதிமுக இருந்திருக்கும்.

பிறகட்சிகளும்...! மதிமுகவும்...!
திமுக
முதல் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்று ..! அனைத்து சிறிய ஊர்களிளும் கிளைகள் உண்டு.! அசைக்க முடியாத தொண்டர்கள் பலம்...! குடும்ப அரசியல் இதன் பலவீனம்..!
அதிமுக
திமுகவிற்க்கு சளைத்தது அல்ல..! அனைத்து சிறிய ஊர்களிலும் கிளைகள் உண்டு.! உணர்சி வசபட்ட தொண்டர்கள் அதிகம்..! தடாலடியாக நிர்வாகிகளை மாற்றுவது பலவீனம்.
பாமக
குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் கிளைகள்.! வன்னியர்கள் மட்டும் தொண்டர்கள்..!
காங்கிரஸ்
தொண்டர்களை விட தலைவர்களே அதிகம் ..! எல்லா ஊர்களிலும் கிளைகள் கிடையாது..! இவர்கள் தனித்து ஒரு தேர்தலையாவது சந்திக்க வேண்டும் அப்போதுதான் இவர்கள் பலம் நமக்கு தெரியும்..! அவர்களுக்கும் புரியும்..!
விடுதலை சிறுத்தைகள்
இவர்கள் கருத்துகள் பொதுவானதாக இருந்தாலும் . தலித் கட்சியாக காட்டிகொண்டு ஒரு மினிமம் கியாரண்டி அடைந்து உள்ளனர். எல்லா ஊர்களிலும் கிளைகள் கிடையாது.

கம்யூனிஸ்ட்
பெரும் பலம் இல்லாவிடாலும் கட்சியினர் உறுதியானவர்கள். எல்லா ஊர்களிலும் கிளைகள் இல்லை..!
தேதிமுக
விஜயகாந்தின் சினிமா கவர்ச்சியில் துவங்கி சராசரி கட்சியாக வளருகிறது.!
கிட்ட தட்ட எல்லா ஊர்களிலும் கிளைகள் உண்டு..! இவர்கள் எதிர்காலத்தை குறைத்து மதிப்பிட முடியாது..!

மதிமுக

திமுக, அதிமுகவிற்க்கு அடுத்த படியாக அனைத்து சிறிய ஊர்களிளும் கிளைகள் உண்டு. மிக சிறிய கிராமத்திலும் மதிமுக ஆட்கள் உண்டு. வலிமையான கட்சி கட்டமைப்பு இதன் பலம். எதிராளிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்காதது இதன் பலவீனம்.
.........................................................................................

இன்றைய தமிழக அரசியல் தலைவர்களில் வைகோவை போன்ற ஆற்றல் படைத்த தலைவர் யாரும் இல்லை என நிச்சயமாய் சொல்ல முடியும். அவர் தமிழக அரசியலில் ஒரு சிறப்பான இடத்திற்க்கு இன்னும் வராமல் இருப்பது வைகோவின் துரதிஷ்ட்டம் அல்ல தமிழ் மக்களின் துரதிஷ்ட்டம்...!


இறுதியாக ஒன்று..!

வைகோவிடம் இருந்து நிர்பந்தம் காரணமாக பிரிந்து வேறுகட்சிகளில் இருந்தாலும் (செஞ்சி,எல்.கணேசன் போன்றவர் அல்ல) அவர்கள் மனதில் வைகோ ஒருவரே தலைவராக இருக்கிறார் . அவர்களை வைகோ மீட்க வேண்டும் அது வைகோவால் முடியும்..! வைகோவால் மட்டுமே முடியும். திமுகவின் குடும்ப அரசியலும், வரும் பொதுதேர்தல் முடிவுகளும் மதிமுகவை எதிர்காலத்தில் வலிமை மிக்க சக்தியாய் மாற்றி அமைக்கும்...!





>

9 comments:

குடுகுடுப்பை said...

நானும் எதிர்பார்க்கிறேன்.

பொன் மாலை பொழுது said...

பாரபட்சமற்ற சரியான கருத்தாய்வு. ஆனால் வை.கோ. தான் எடுத்த சில தவறான முடிவுகளால் மட்டுமே பொதுவானவர்களின் நம்பிக்கையில் சற்று சரிந்தார். இதுவரையில் ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால் ஊழல் குற்றங்கள் இல்லை. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இவர்களின் மாற்றாக நிச்சயம் தமிழகத்தில் ஒரு மாற்றாக வர வேண்டியவர்தான். ஆனால் இன்று வரை இதனை இவர் உணர்ந்ததாக தெரியவிலையே.!

//அவர்தமிழக அரசியலில் ஒரு சிறப்பான இடத்திற்க்கு இன்னும் வராமல் இருப்பதுவைகோவின் துரதிஷ்ட்டம் அல்ல தமிழ் மக்களின் துரதிஷ்ட்டம்...!//

உண்மைதான் தமிழ். இனியாவது அவர் இதனை உணர்ந்து செயல் பட வேண்டும்.

சக்தி கல்வி மையம் said...

அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..


http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_23.html

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமையா எழுதி இருக்கிய தமிழ்...! இது தான் உண்மை...!

Anonymous said...

நேர்த்தியான நேர்மையான கண்ணோட்டத்தில் எழுதியிருக்கீங்க..இவர் மேடை பேச்சிலும் சரி பாராளுமன்றத்திலும் சரி சிம்மக்குரலோன் என சொல்லலாம்.. மிகச்சரியான அலசல்..

மு.சரவணக்குமார் said...

ஒருவர் தகுதியானவர் என்று நம்புகிறோம், அதனால் அவரிடம் நிறைய எதிர்பார்க்கிறோம். அவரும் ஆர்பாட்டமாய் களமிறங்குகிறார். ஆர்ப்பரித்து பின் செல்கிறோம்.போர்வாள் சுழன்று புதிய நீதி படைக்கும் என எதிர்பார்க்கும் போதுதான் தெரிகிறது. அவர் கையிலிருப்பது அட்டைக் கத்தியென...!

மண்குதிரைகள் ஒரு போதும் கரையேறாது.

Chitra said...

விரிவான அலசல்.

இருவர் said...

நல்ல ஒரு பார்வை.....
ஒரு காலத்துல மக்களுக்காக தொண்டனா இருக்க அரசியல்வாதிகளை தேர்வு செய்தார்கள்..
ஆனால் இப்போ அரசியலில் தொண்டன்னா பொது மக்கள் தான்...

ராஜேஷ், திருச்சி said...

funny.. vaiko was a leader once.. not now.. not just because of his alliance with DMK and ADMK.. but he doesn't have the basic leadership capabilities.


more over, too much of unarchivasam .. extreme reaction for everything.. like (jayalalitha chandrika vin oodhu kuzhal.. ratchashi jayalalitha --- paasamigu sagodhari jayalalitha.. annan , nalam kaakkum kalaingar.. kalaingar theeya sakthi..) which will not work out in politics.

already his party is bought out by Jaya.. nothing left.. so most probably the last election for vaiko

all letter pad parties names are also being highlighted in news.. but vaiko's party??? kapchip.. whatever amma give.. ammavey saranam nu vaangitu pogara nilai dhan